Lyrics Of "Poongatre Poongatre" From "Paiyaa"
Sung By Benny Dayal
Music By Yuvan Shankar Raja
poongaatre pongaatre pooppola vanthaal ival
pogindra vazhiyellaam santhosham thanthaal ival
en nenjodu veesum intha pennoda vaasam
ival kannodu pookkum pala vinmeengal pesum
en kaadhal solla oru vaarthai illai
en kannukkulle ini kanave illai
(poongaattre...)
manjal vaanam konjam megam
konjip pesum kaattru thottuch selluthe
niruththaamal sirikkindren
intha nimidangal punnagaiyai poottik kondathe
kannaadi sari seidhu pinnaadi
un kannai paarkkindren paarkindren
penne naan un munne oru vaarthai pesaamal
thorkindren thorkindren
vazhippokkan ponaalum vazhiyil kaaladiththadam irukkum
vaazhkaiyil intha nodi vaasanaiyodu ninaivirukkum
(poongaatre..)
azhagaana nadhip paarthaal adhan peyarinai ketka manam thudikkum
ival yaaro enna pero naane arinthidum malaiyan oru pakkam
yethetho oorthaandi eralaam perthaandi
pogintren pogintren
nillendru solgindra nedunchaalai vilakkaaga
anaigindren erigindren
mozhitheriyaa paadalilum arthangal indru purigirathe
vazhithunaiyaai nee vanthaai
pogum thooram kuraigirathe
(en nenjodu...)
(poongaatre...)
---------------------------------------
:::Poongatre Poongatre Lyrics In Tamil:::
பாடியவர்: பென்னி தயால்
படம்: பையா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
என் நெஞ்சோடு பேசும் இந்தப் பெண்ணோடப் பாசம்
இவள் கண்ணோடுப் பூக்கும் பல விண்மீன்கள் பேசும்
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை
பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
கொஞ்சிப் பேசும் காற்று தொட்டுச் செல்லுதே
நிறுத்தாமல் சிரிக்கின்றேன்
இந்த நிமிடங்கள் புன்னகையை பூட்டிக்கொண்டதே
கண்ணாடி சரி செய்து பின்னாடி
உன் கண்ணைப் பார்க்கின்றேன் பார்க்கின்றேன்
பெண்ணே நான் உன் முன்னே ஒரு வார்த்தைப் பேசாமல்
தோற்கின்றேன் தோற்கின்றேன்
வழிப்போக்கன் போனாலும் வழியில் காலடித்தடயம் இருக்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும்
பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
அழகான நதிப்பார்த்தால் அதன் பெயரினைக் கேட்க மனம் துடிக்கும்
இவள் யாரோ என்னப் பேரோ நானே அறிந்திடும் வரையில் ஒரு மயக்கம்
ஏதேதோ ஊர்த் தாண்டி ஏராளம் பேர்த்தாண்டி
போகின்றேன் போகின்றேன்
நில்லென்று சொல்கின்ற செடுஞ்சாலை விளக்காக
அணைகின்றேன் எரிகின்றேன்
மொழித்தெரியா பாடலிலும் அர்த்தங்கள் இன்று புரிகிறதே
வழித்துணையாய் நீ வந்தாய்
போகும் தூரம் குறைகிறதே
என் நெஞ்சோடு பேசும் இந்தப் பெண்ணோடப் பாசம்
இவள் கண்ணோடுப் பூக்கும் பல விண்மீன்கள் பேசும்
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை
பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
No comments:
Post a Comment